ஆண்டு வருவாய் 2 லட்சம் என்று கூறிய பெண்: ஆனால் அவருக்கு சுவிஸ் வங்கியில் இருக்கும் தொகை எவ்வளவு தெரியுமா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
2365Shares

மும்பையில் வசிக்கும் ஒரு பெண் தனது மாத வருமானம் சுமார் 14,000 ரூபாய் என வருமானவரித்துறையினரிடம் தெரிவித்திருந்தார்.

அவரது ஆண்டு வருவாய் சுமார் 2 இலட்சம் ரூபாய் என அவர் தெரிவித்திருந்தநிலையில், அவரது சுவிஸ் வங்கிக் கணக்கில் சுமார் 200 கோடி ரூபாய் இருப்பது தெரியவந்துள்ள விடயம் அதிரவைத்துள்ளது.

ரேணு தாரணி (80) என்னும் அந்த பெண், 2005-06 வருமான வரி தாக்கல் செய்யும்போது, இது குறித்து எந்த விவரமும் தெரிவிக்கவில்லை.

இந்த வழக்கு 2014ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, தனக்கு சுவிஸ் வங்கியில் கணக்கே இல்லை என்று கூறியிருந்தார்அவர்.

ஆனால், அவருக்கு ஜெனீவா வங்கி ஒன்றில் கணக்கு இருப்பது தெரியவந்துள்ள நிலையில், அவரது வங்கிக்கணக்கில் 196 கோடி ரூபாய் இருப்பது தெரியவந்துள்ளது.

அவர் அளித்துள்ள வருமான அளவின்படி பார்த்தால், அவர் இவ்வளவு பெரிய தொகையே சேர்க்க 11,500 ஆண்டுகள் உழைத்திருக்கவேண்டும்.

இவ்வளவு குறுகிய காலத்தில், இவ்வளவு பெரிய தொகை அவரது வங்கிக்கணக்கில் வந்தது எப்படி என்பது இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.

ஆகவே, வருமான வரி மேல்முறையீட்டு ஆணையத்தின் மும்பை கிளை, வரி செலுத்துமாறு தாரணிக்கு உத்தரவிட்டுள்ளதோடு, அபராதமும் விதித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்