ராணுவத்தில் கோமாளிகள்... பிரான்சில் மானத்தை வாங்கிய சுவிஸ் வீரர்கள்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

முதல் முறையாக பிரான்ஸ் தேசிய தினத்தில் ராணுவ மரியாதை அணிவகுப்பில் கலந்துகொள்ள சுவிஸ் ராணுவத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், நாட்டின் மானத்தை வாங்கிவிட்டு வந்திருக்கிறார்கள் ராணுவ வீரர்கள்.

அதன்படி, சுவிஸ் கொடியை ஏந்தி நடந்த வீரர்கள் நடந்த நடை, அணிவகுப்புக்கான நடை அல்ல.

ஒருவர் இடதுகாலை எடுத்து வைக்க, மற்றவர் வலது காலை எடுத்து வைக்க, அணிவகுப்பையே சொதப்பிவிட்டார்கள் ராணுவ வீரரகள் என்று கிழி கிழியென கிழித்திருக்கிறது சுவிட்சர்லாந்தின் 20 Minutes செய்தித்தாள்.

’வரலாற்று சிறப்பு மிக்க சொதப்பல்’ என தலைப்பு செய்தியிட்டுள்ள அந்த பத்திரிகை, பிரான்ஸ் நாட்டில் சுவிஸ் ராணுவம் தன்னையே அவமதித்துக்கொண்டுள்ளது என்று தனது செய்தியில் எழுதியுள்ளது.

சமூக ஊடக பயனர்களும் சுவிஸ் ராணுவத்தை மோசமாக விமர்சித்திருக்கிறார்கள். ஒருவர், ‘அவமானம், சுவிஸ் ராணுவத்தில் கோமாளிகள்தான் இருக்கிறார்கள்’ என்று விமர்சித்திருக்கிறார்.

எல்லாவற்றிற்கும் மேல், ராணுவ செய்தி தொடர்பாளரே, அணிவகுப்பு திட்டமிட்டபடி நடக்கவில்லை என கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்