சுவிட்சர்லாந்துக்கு எதிராக ஸ்வீடன் மேற்கொண்டுள்ள பழிவாங்கும் நடவடிக்கை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்துக்கு எதிராக ஸ்வீடன் மேற்கொண்டுள்ள பழிவாங்கும் நடவடிக்கையாக, தன் நாட்டு மக்களை சுவிட்சர்லாந்துக்கு போகவேண்டாம் என அந்நாடு அறிவுறுத்தியுள்ள விடயம் பரபரப்பாக பேசப்படுகிறது.

சுவிட்சர்லாந்துக்கு வரும் ஸ்வீடன் நாட்டவர்கள் தங்களை கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால்,

பழிக்குப்பழி வாங்குவதற்காகவே தன் நாட்டு மக்களை சுவிட்சர்லாந்துக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதாக வெளிப்படையாகவே தெரிவித்துள்ளது ஸ்வீடன்.

ஜூலை 15ஆம் திகதி தனது நாட்டு மக்களை சுவிட்சர்லாந்துக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தியுள்ள நிலையில், அன்றைய தினத்தில்தானே, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலிக்கு செல்லவேண்டாம் என கொடுக்கப்பட்டிருந்த எச்சரிக்கையை விலக்கிக்கொண்டுள்ளது அந்நாடு.

இது ஒரு பழிவாங்கும் நட்வடிக்கை என்பதை இன்று ஸ்வீடன் அரசின் பிரதிநிதி ஒருவர் உறுதிசெய்துள்ளார்.

ஸ்வீடனில் கொரோனா தொற்றுவீதம் அதிகரித்து வருவதை மேற்கோள்காட்டி, சுவிட்சர்லாந்து ஜூலை 6ஆம் திகதி ஸ்வீடனிலிருந்து வருவோர் தங்களை 10 நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்