சுவிட்சர்லாந்து கட்டாய தனிமைப்படுத்தல் விதிகளில் சில முக்கிய மாற்றங்கள்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

நேற்று (22.7.2020) சுவிட்சர்லாந்து தனது நாட்டு கட்டாய தனிமைப்படுத்தல் விதிகளில் சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

கொரோனா அபாயம் அதிகமுள்ள சில நாடுகளை கட்டாய தனிமைப்படுத்தல் தேவையுள்ள நாடுகள் பட்டியலில் புதிதாக இணைத்துள்ள சுவிட்சர்லாந்து, ஜூலை 22 நள்ளிரவுக்குப்பிறகுதான் அந்த குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வருவோருக்கு இந்த புதிய தனிமைப்படுத்தல் விதிகள் அமுலுக்கு வரும் என்று அறிவித்திருந்தது.

ஆனால், தற்போது, அந்த குறிப்பிட்ட அதிக அபாயம் கொண்ட நாட்டிலிருந்து ஏற்கனவே சுவிட்சர்லாந்துக்கு வந்தவர்களும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று நேற்று அறிவித்துள்ளது.

உதாரணமாக, மெக்சிகோ அல்லது போஸ்னியாவிலிருந்து யாராவது ஜூலை 20ஆம் திகதி சுவிட்சர்லாந்துக்கு வந்திருந்தால், அவர்கள் ஜூலை 30 வரை தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.

அதிக அபாயம் உள்ள நாடுகள் பட்டியலில் தற்போது இணைக்கப்பட்டுள்ள நாடுகளாவன: கிர்கிஸ்தான், லக்ஸம்பர்க், மோண்டினெக்ரோ, கசகஸ்தான், கோஸ்டா ரிக்கா, மாலத்தீவுகள், பாலஸ்தீனம், குவாதிமாலா, சுரினாம், எஸ்வாட்டினி, போஸ்னியா மற்றும் ஹெர்செகோவ்னியா, ஈக்வடார், மெக்சிகோ, எல் சால்வடார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்