எந்த நாட்டவர்கள் எல்லாம் சுவிட்சர்லாந்துக்கு வர அனுமதிக்கப்படுவார்கள்?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

எந்த நாட்டவர்கள் எல்லாம் சுவிட்சர்லாந்துக்கு வர அனுமதிக்கப்படுவார்கள்? அதிலும் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடுகள் அல்லாத, அதாவது ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் உள்ள நாடுகளில், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் எல்லாம் சுவிட்சர்லாந்துக்கு வரலாம் என்பதைக் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி.

ஜூன் மாத மத்தியில் சுவிட்சர்லாந்து தனது எல்லைகளை படிப்படியாக திறக்கத்துவங்கியதிலிருந்தே, எந்த நாட்டவர்கள், எந்த சூழலில் சுவிட்சர்லாந்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்து ஒரு குழப்பமான சூழல் நிலவியவண்ணமே இருந்தது, குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியமல்லாத நாட்டவர்களுக்கு...

அந்த கேள்விக்கான பதில் இதோ! அல்ஜீரியா, அவுஸ்திரேலியா, கனடா, ஜார்ஜியா, ஜப்பான், மொராக்கோ, நியூசிலாந்து, ருவாண்டா, தென்கொரியா, தாய்லாந்து, துனிஷியா மற்றும் உருகுவே நாட்டைச் சேர்ந்தவர்கள் ஜூலை 20 முதல் சுவிட்சர்லாந்துக்குள் வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

அத்துடன், Schengen பகுதிக்கு வெளியிலிருக்கும் பல்கேரியா, அயர்லாந்து, குரோவேஷியா, ரொமேனியா மற்றும் சைப்ரஸ் ஆகிய நாட்டவர்களுக்கும் சுவிட்சர்லாந்து வர அனுமதி உண்டு.

இன்னொரு முக்கியமான விடயம், இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் சுவிட்சர்லாந்து வந்தால், அவர்களுக்கு தனிமைப்படுத்தல் கிடையாது என்பது கூடுதல் மகிழ்ச்சியான செய்தி.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்