ஜெனீவா ஏரியில் சிறுமியின் சடலம்: வெளியான அதிர்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா ஏரியில் 6 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் வாட் மண்டலத்தின் Cully பகுதியில் இருந்து 6 வயது சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது 2019 ஆகஸ்டு 11 அன்று வலாய்ஸ் மண்டலத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் மண் சரிவில் சிக்கி காருடன் மாயமான 37 வயது நபருடன் சென்ற 6 வயது சிறுமி என தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமியுடன் அந்த விபத்தில் சிக்கிய நபரின் உடல் இதுவரை மீட்கப்படவில்லை.

வாட் மண்டல பொலிசார் ஜெனீவா ஏரியில் இருந்து மீட்கப்பட்ட அந்த சிறுமியின் உடலை அடையாளம் காண Lausanne கொண்டு சென்றுள்ளனர்.

டி.என்.ஏ சோதனை முன்னெடுக்கப்பட்டதில், ஆகஸ்ட் 11, 2019 அன்று புயலுக்குப் பின்னர் பெருவெள்ளம் மற்றும் மண் சரிவில் சிக்கி காணாமல் போன பிரான்ஸைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி என்பது உறுதி செய்யப்பட்டது.

ஜெனீவாவைச் சேர்ந்த 37 வயதான நபருடன் லோயர் வலாய்ஸில் ஒரு காரில் பயணித்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த விபத்தானது சிறுமியின் தாயாரும் அவரது தோழியும் கண் முன்னே நடந்துள்ளது.

தொடர்ந்து சுமார் 70 பேர் கொண்ட குழு இரவு முழுவதும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டும் ஏமாற்றமே மிஞ்சியது.

ஆனால் அவர்கள் பயணித்த அந்த கார் மட்டும் சாமோசனுக்கு வெளியே அக்டோபர் 14 ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டது.

தற்போது சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், எஞ்சிய இருவரின் சடலங்களும் தேடப்படும் என மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்