சுவிட்சர்லாந்தில் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டை வர இதுதான் காரணமாம்: ஒரு சுவாரஸ்ய ஆய்வு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டை வருவதற்கு என்ன காரணம் என்பதை அறிவதற்காக ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வில், பக்கத்து வீட்டிலிருந்து வரும் சத்தம், தூசு மற்றும் மொத்தமாக ஒரு இடத்தில் எல்லோரும் துணிகளைக் காயப்போடுவது ஆகியவைதான் முக்கிய பிரச்சினைகள் என தெரியவந்துள்ளதை அடுத்து, இந்த விடயங்கள் உலகம் முழுமைக்கும் ஒரேமாதிரிதான் என எண்ணவைத்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், சுவிஸ் மக்களில் பாதி பேர் பக்கத்து வீட்டிலிருந்து வரும் சத்தத்தை தொல்லையாக கருதுவதாக தெரிவித்துள்ளனர்.

51 சதவிகிதம் பிரெஞ்சு மொழி பேசும் சுவிஸ் மக்கள், 49 சதவிகிதம் ஜேர்மன் மொழி பேசும் சுவிஸ் மக்கள் பக்கத்து வீட்டிலிருந்து வரும் சத்தத்தை தொல்லையாக கருதும் நிலையில், 32 சதவிகிதம் இத்தாலிய மொழி பேசுவோர், தாங்களும் அவ்வாறே கருதுவதாக தெரிவித்துள்ளனர்.

சத்தத்திற்கு அடுத்தபடியாக, மக்கள் தொல்லையாக கருதும் விடயம், துணி துவைத்துக் காயப்போடுவது...

32 சதவிகிதம் சுவிஸ் மக்கள், துணி துவைத்தபின் இடத்தை சுத்தம் செய்யாமல் போவது, காயப்போட்ட துணிகளை எடுக்காமல் விடுவது, மற்றும் ஒருவர் கயிற்றில் மற்றொருவர் துணி காயப்போடுவது ஆகிய காரணங்களால் எரிச்சலடைவதாக தெரிவித்துள்ளார்கள்.

இவற்றைத் தொடர்ந்து சுத்தமின்மை (15%), செல்லப்பிராணிகள் (14%) ஆகியவற்றை சுவிஸ் மக்கள் தொல்லையாக பார்க்கிறார்களாம்.

இதுபோக, ஐந்தில் ஒரு சுவிஸ் குடிமகனுக்கு (22%), வீட்டு உரிமையாளருடன் சண்டை வருகிறதாம்.

வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், வளர்ச்சியில் பின் தங்கிய நாடுகள் என எத்தனை பாகுபாடு இருந்தாலும், மனிதர்கள் எல்லோரும் ஒரே

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்