குடியிருப்பாளர் அல்லாதோருக்கு சுவிஸில் குளிக்க அனுமதி இல்லை: அமுலுக்கு வந்த புதிய விதி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் ஜூரா மண்டலத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் கொரோனா பரவலை எதிர்கொள்ளும் வகையில் புதிய விதி ஒன்றை வியாழக்கிழமை முதல் அமுலுக்கு கொண்டு வந்துள்ளது.

ஜூரா மண்டலத்தின் குட்டி நகரமான Porrentruy கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக, வியாழக்கிழமை முதல், சுவிட்சர்லாந்தில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே நகராட்சி நீச்சல் குளத்தை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும்.

இது குளியலறையில் சிறந்த சுகாதார கட்டுப்பாட்டை செயல்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் முன்னெடுக்கப்படுகிறது.

மேலும், அதிக எண்ணிக்கையிலான மக்கள் நகராட்சி நீச்சல் குளத்தை பயன்படுத்த கோரும் நிலை ஏற்பட்டால், தற்காலிகமாக அனுமதியை முற்றிலும் நிறுத்தப்படவும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விதியை அமுல் படுத்துவது தொடர்பாக கூடுதல் பாதுகாப்பு பணியாளர்கள் தேவை என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் ஜூரா மண்டலத்தில் குடியிருக்கும் அனைத்து மக்களும் நகராட்சி நீச்சல் குளத்தை பயன்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்