விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுவன் மீது திடீரென பாய்ந்து தாக்கிய பொலிஸ் நாய்: பின்னர் நடந்த சோகம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுவன் ஒருவன் மீது, எதிர்பாராத நேரத்தில் பொலிஸ் நாய் ஒன்று பாய்ந்து கடித்துக்குதறியது.

இத்தனைக்கும் அதை அதன் பயிற்சியாளர் பிடித்திருந்திருக்கிறார். ஆனால், அந்த நாயை கட்டியிருந்த கயிறு மிக நீளமாக இருந்ததாக தெரிவிக்கிறார் அந்த சிறுவனின் தாய்.

பெர்ன் மாகாணத்தைச் சேர்ந்த Johan என்னும் அந்த சிறுவன் தாக்கப்பட்டு மூன்று வாரங்கள் ஆன நிலையிலும் அவன் முற்றிலும் குணமாகவில்லை. அந்த பொலிஸ் நாய் Johanஐத் தாக்கும்போது பணியிலும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அது ஒரு நல்ல பொலிஸ் நாய் என்று தெரிவித்துள்ள பொலிசார், ஆனால், தான் எப்போது பணியிலிருக்கிறேன், எப்போது பணியில் இல்லை என்பதை அதனால் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்கள்.

எனவே, அந்த பொலிஸ் நாய் கருணைக்கொலை செய்யப்பட்டுவிட்டது... அதைத்தவிர வேறு சிறந்த முடிவு இல்லை என்கிறார்கள் விலங்குகள் நல மருத்துவர்கள்!

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்