சுவிட்சர்லாந்தில் மூன்றில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இங்கிருந்துதான் பரவுகின்றது!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் பாதிக்குப் பாதி கொரோனா தொற்றுகள் இரவு விடுதிகளிலிருந்து பரவுவதாகவும், மூன்றில் ஒரு பங்கு மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களிலிருந்து பரவுவதாகவும் தெரியவந்துள்ளது.

சுவிஸ் பொது சுகாதார அலுவலகம் மேற்கொண்ட புதிய ஆய்வு ஒன்றில், இரவு விடுதிகள், மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களிலிருந்து சமூகத்திற்குள் கொரோனா பரவுவது தெரியவந்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் சுவிட்சர்லாந்தில் புதிதாக பரவிய கொரோனா தொற்றுக்களில், 42 சதவிகிதம் இரவு விடுதிகளிலிருந்துதான் வந்துள்ளது.

27 சதவிகிதம் மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களிலிருந்து சமூகத்திற்குள் பரவியுள்ளது, அதாவது புதிதாக பரவியுள்ள 69 சதவிகிதம் தொற்றும் இரவு விடுதிகள் அல்லது உணவகங்களிலிருந்துதான் பரவியுள்ளது உறுதியாகியுள்ளது.

வெறும் 12 சதவிகிதம் மட்டுமே குடும்ப உறுப்பினர் ஒருவரிடமிருந்து பரவியுள்ளது, 8 சதவிகிதம் மருத்துவ அலுவலர்களிடமிருந்து பரவியுள்ளது.

இதனால், பல இரவு விடுதிகள் தங்கள் விடுதிகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை பெருமளவில் குறைத்துள்ளன, மற்ற சில விடுதிகள் மாஸ்க் அணிந்து வருமாறு வாடிக்கையாளர்களை அறிவுறுத்தியுள்ளன.

அத்துடன், இரவு விடுதிகளுக்குச் செல்லும் அனைவரும் 1.5 மீற்றர் இடைவெளியை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்