சுவிஸில் பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: வெளிவரும் தகவல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் Graubünden மண்டலத்தில் பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் வெளியாகியுள்ளது.

Sagogn பகுதியில் ஞாயிறு இரவு 8.10 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. பயணிகள் எவருமின்றி காலியாக சென்ற நிலையில், சாரதி மட்டும் காயங்களுடன் தப்பியுள்ளார்.

Graubünden மண்டல பொலிசாருக்கு பயணிகள் பேருந்து ஒன்று Oberalpstrasse பகுதியில் உள்ள சாலையில் விபத்துக்குள்ளானதாக தகவல் கிடைத்துள்ளது.

தகவலை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த சென்ற பொலிசார், பயணிகள் பேருந்து ஒன்று சுமார் 40 மீற்றர் பள்ளத்தில் கவிழ்ந்து கிடப்பதை கண்டுள்ளனர்.

இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட மீட்புக்குழுவினர் போராடி விபத்தில் சிக்கிய சாரதியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மீட்பு நடவடிக்கையில் சுமார் 25 பேர் களமிறக்கப்பட்டு, சாரதியை மீட்டுள்ளனர். விபத்து பகுதியில் இருந்து பேருந்தை திங்களன்று மாலை நேரம் அப்புறப்படுத்தப்படும் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். இதனால், லாக்ஸ் மற்றும் ஸ்க்லூயின் இடையேயான சாலை சுமார் ஐந்து மணி நேரம் மூடப்படும் என கூறப்படுகிறது.

பேருந்து விபத்துக்கான சரியான காரணம் தொடர்பில் மண்டல பொலிசார் விசாரணை முன்னெடுக்க முடிவு செய்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்