தவறான தகவல் கொடுத்துவிட்டோம்... மன்னிக்கவேண்டும்: கொரோனா பரவல் குறித்து சுவிஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சென்ற வாரம் சுவிட்சர்லாந்தில் பாதி கொரோனா தொற்றுக்கு இரவு விடுதிகள்தான் காரணம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அது தவறான தகவல் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஜூலை 31ஆம் திகதி பொது சுகாதாரத்துறை, சுவிட்சர்லாந்தில் பதிவான 42 சதவிகித கொரோனா தொற்றும் இரவு விடுதிகளிலிருந்து பரவியதுதான் என்றும், 27 சதவிகிதம் மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களிலிருந்து பரவியது என்றும் தெரிவித்திருந்தது.

ஆனால், நேற்று தனது முந்தைய அறிக்கையை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ள சுகாதாரத்துறை, தனது கணக்கீட்டில் தவறிழைத்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

இரவு விடுதிகள், உணவகங்களைவிட, கொரோனா தொற்றிய குடும்ப உறுப்பினர்களிடமிருந்துதான் அவர்களுடன் தொடர்பிலிருந்த மற்றவர்களுக்கு அதிகமாக கொரோனா தொற்று பரவியுள்ளது என தற்போது அறிவித்துள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள்,

முன்பு வெளியான தவறான தகவலுக்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஜூலை 16க்கும் ஆகத்து 1க்கும் இடையில் பெறப்பட்ட தகவலின்படி தொற்றுக்கு ஆளான 793பேரில், தொற்றுக்கு ஆளான 216 பேர் குடும்ப உறுப்பினர்களால் தொற்றுக்கு ஆளானவர்கள்.

அதற்கு அடுத்தபடியாக அலுவலகம்தான் நோய் பரப்பும் முக்கிய இடமாக இருந்துள்ளது, 69பேர் அலுவலகங்களிலிருந்து நோய்த்தொற்றைப் பெற்றுள்ளார்கள்.

மூன்றாவதாக தனிப்பட்ட விதத்தில் மக்கள் கூடும் இடங்கள்... ஆனால், இரவு விடுதிகள் மற்றும் நடன விடுதிகளில் 15 பேரும், மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களில் 13 பேரும் மட்டுமே கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக தற்போது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்