சுவிஸில் தந்தை கண் முன்னே சுட்டுக்கொல்லப்பட்ட மனநலம் குன்றிய நபர்: முழுமையான தகவலை வெளியிட்ட பொலிசார்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
921Shares

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் தந்தையின் கண் முன்னே மனநலம் குன்றிய நபர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் பொலிசார் முழுமையான பின்னணியை தற்போது வெளியிட்டுள்ளனர்.

பெர்ன் மண்டலத்தின் Schönberg மாவட்டத்தில் 2019 ஜூலை 17 ஆம் திகதி நடந்த இச்சம்பவத்தில் தொடர்புடைய அந்த 36 வயது நபர் பெர்னில் உள்ள பல்கலைக்கழக மனநல சேவைகள் மையத்தில் இருந்து தப்பியுள்ளார்.

அந்த மனநல சேவைகள் மையம் அளித்த புகாரின் அடிப்படையில் இரு பொலிசார் கொண்ட ரோந்துப் படை அவரை தேடி வந்துள்ளது.

அந்த நபரின் வசிப்பிடத்தில் அதிகாரிகளால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், அவர்கள் அந்த நபரின் பெற்றோரின் குடியிருப்புக்கு தேடிச் சென்றுள்ளனர்.

தப்பி ஓடிய அந்த நபரின் தந்தை கதவைத் திறந்து தனது மகன் தன்னுடன் இருப்பதாக பொலிசாரிடம் ரகசியமாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பொலிசார், அந்த மனநலம் குன்றிய நபரிடம், மருத்துவமனைக்கு திரும்ப வேண்டும் என்பதை விளக்கியுள்ளனர்.

திடீரென்று அந்த நபர் மாடிக்கு சென்று ராணுவத்தில் இருந்து தந்தைக்கு அளிக்கப்பட்டிருந்த துப்பாக்கியை கைப்பற்றியுள்ளார்.

நிலைமை கைவிட்டு போவதாக உணர்ந்த பொலிசார், உதவிக்கு ஆயுத பொலிசாரை அழைத்ததுடன், அந்த நபரிடம் இருந்து தப்பிக்க பதுங்கியுள்ளனர்.

தொடர்ந்து துப்பாக்கியை ஒப்படைக்க கோரிய பொலிஸ் அதிகாரி மீது அந்த நபர் குறிவைக்கவும், வேறு வழியின்றி அந்த அதிகாரி நான்கு முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த அந்த மனநலம் குன்றியவர், சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கில், அந்த பொலிஸ் அதிகாரி தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டதை அடுத்து அவர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்