இந்த மூன்று நாட்டவர்களுக்கும் சுவிட்சர்லாந்தின் பேசல் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை கட்டாயம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பேசல் விமான நிலையத்தில் வந்திறங்கும் மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, நாட்டுக்குள் நுழையும் முன் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மூன்று நாடுகள், துருக்கி, இஸ்ரேல் மற்றும் செர்பியா... அத்துடன், கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தாலும்,

பயணிகள் 14 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மனித உடலில் கொரோனா கிருமி நுழைந்து 5 நாட்களுக்குப் பிறகே அவற்றை பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில், சூரிச் மற்றும் ஜெனீவா விமான நிலையங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்