சுவிஸில் ஆசிரியரியரால் துஸ்பிரயோகத்திற்கு இலக்கான மாணவர்கள்: பல ஆண்டுகள் நீடித்த கொடுமை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் புனித உர்சுலா மடத்தின் 26 முன்னாள் மாணவர்கள் கன்னியாஸ்திரி ஒருவரால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக தற்போது புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த மடத்தின் நிர்வாகிகள் பொதுமன்னிப்பு கோரியுள்ளனர்.

பிரிகில் அமைந்துள்ள புனித உர்சுலா மடத்தில் கன்னியாஸ்திரியால் மாணவர்கள் சித்திரவைதைக்கு இலக்கான காலகட்டத்தில், அவர்களுக்கு 10-ல் இருந்து 12 வயதே என கூறப்படுகிறது.

உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அந்த கன்னியாஸ்திரி மாணவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளார்.

இந்த 26 மாணவர்களில் பலருக்கும் அந்த கன்னியாஸ்திரியால் ரத்த காயங்களும் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இந்த சம்பவங்கள் வெளியே எவருக்கும் கசியாதபடி அந்த கன்னியாஸ்திரி கவனமாக இருந்துள்ளார்.

இந்த 26 பேரில் பலர் தற்போதும் உளவியல் சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது 45 முதல் 62 வயதான அந்த பாதிக்கப்பட்டவர்கள் கடந்த மார்ச் மாதம் புனித உர்சுலா மடத்தின் தற்போதைய நிர்வாகத்திற்கு விரிவான புகார் மனு ஒன்றை அனுப்பி தங்கள் விவகாரத்தில் பொதுமன்னிப்பு கோரவும் வலியுறுத்தியுள்ளது.

இந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்ட அந்த கன்னியாஸ்திரி தற்போது பணி ஓய்வு பெற்றுள்ளதாகவும், அவர் மறதி நோய்க்கு இலக்காகி சிகிச்சையில் உள்ளார் எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆனால் அந்த கன்னியாஸ்திரி சார்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் தாங்கள் மன்னிப்பு கோருவதாக அறிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்