சுவிஸ் எல்லையில் கட்டப்படும் ஷாப்பிங் சென்டர்: பிரான்சின் பழிவாங்கும் நடவடிக்கையா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து எல்லையில் பிரான்ஸ் புதிதாக ஷாப்பிங் சென்டர் ஒன்றைக் கட்ட உள்ளது.

50,000 சதுர மீற்றர் பரப்பளவில் 2,000 கார் பார்க்கிங் வசதியுடன் கட்டப்படும் அந்த ஷாப்பிங் சென் டர் பழிவாங்கும் நடவடிக்கையாக கட்டப்படுவதாக சுவிஸ் நாட்டு மக்கள் கருதுகிறார்கள்.

அதாவது, பிரான்சிலுள்ள Saint Genis பகுதி வரை ட்ராம் வண்டிகள் செல்வதற்காக பாதை அமைப்பதற்கு பிரான்ஸ் சுவிட்சர்லாந்திடம் நிதியுதவி கோரியதாம். ஆனால், சுவிட்சர்லாந்து நிதியுதவி செய்ய மறுத்துவிட்டதாம்.

ஆகவே, அதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாகவே இந்த ஷாப்பிங் சென்டரை பிரான்ஸ் சுவிட்சர்லாந்து எல்லையில் கட்டுகிறதாம்.

அந்த பிரமாண்ட ஷாப்பிங் சென்டர் சுவிஸ் எல்லையில் கட்டப்படுவதால், தங்கள் வியாபாரம் பாதிக்கும் என சுவிஸ் வர்த்தகர்கள் அஞ்சுகிறர்களாம்.

அத்துடன், சுற்றுச்சூழலை பாதிக்கும் ஒரு பிரச்சினையும் உள்ளதாம். அந்த ஷாப்பிங் சென்டர் ஈரப்பதமுடைய ஒரு நிலப்பகுதியை ஆக்கிரமித்து கட்டப்படுகிறதாம்.

அப்படி அந்த ஷாப்பிங் சென்டர் அந்த இடத்தில் கட்டப்படுவதால், நிலத்தடி நீர் சேருவது பாதிக்கப்படுவதோடு, Allondon நதிக்கு நீர் செல்வதும் தடுக்கப்படுமாம். அப்படி மட்டும் நிகழ்ந்துவிட்டால் Allondon நதி காய்ந்துபோய்விடும் என அஞ்சுகிறார்கள் சுற்றுச்சூழலியலாளர்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்