சுவிஸில் இதற்கு முன்னர் ஒருபோதும் இளைஞர்கள் மீது இந்த அளவுக்கு புகார் தெரிவிக்கப்பட்டதில்லை!

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் இதற்கு முன்னர் ஒருபோதும் ஆபாச காணொளிகள் தொடர்பாக இந்த அளவுக்கு இளைஞர்கள் மீது புகார் செய்யப்படவில்லை என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஓராண்டில் மட்டும் இந்த எண்ணிக்கையானது நம்பமுடியாதபடி 230 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டில், சூரிச் மண்டலத்தில் முன்பை விட அதிகமான இளைஞர்கள் மீது ஆபாசப் படங்களை பகிர்ந்து கொள்வது மற்றும் வன்முறைகளை சித்தரிப்பது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஆபாசக் காணொளிகளின் விநியோகம் சூரிச் மண்டல இளைஞர்களிடையே கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு சூரிச் மண்டலத்தில் 278 இளைஞர்கள் ஆபாசப் படங்களுக்காகப் புகார் செய்யப்பட்டனர் என அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த நடவடிக்கையானது 230 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், வன்முறை தொடர்பில் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளை சித்தரிப்பதும் குறிப்பிடும்படி அதிகரித்துள்ளது.

பெரும்பாலும் இவை குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு முற்றிலும் பொருந்தாத மிருகத்தனமான வீடியோக்கள் என அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்