சுவிட்சர்லாந்தில் ஆற்றில் மிதந்த தலையில்லாத பெண்ணின் சடலம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
725Shares

சுவிஸில் பெர்ன் மண்டலத்தில் ஆரே ஆற்றில் தலை இல்லாத பெண்ணின் சடலம் ஒன்றை வழிபோக்கர் ஒருவர் கண்டறிந்து பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

விசாரணையில் அந்த சடலம் 22 வயது எரித்திரிய பெண் என தெரியவந்துள்ளது.

ஆரே ஆற்றில் செவ்வாய்க்கிழமை மாலை தலையில்லாத சடலம் ஒன்று மிதப்பதாக நேரிடையாக பார்த்த ஒருவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

சடலம் ஆணா அல்லது பெண்ணா என்பது தமக்கு உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த மண்டல பொலிசார், சடலத்தை கரைக்கு கொண்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்ததுடன், புதனன்று இச்சம்பவத்தை உறுதி செய்தனர்.

தலையில்லாத சடலமாக மீட்கப்பட்டவர் 22 வயதான எரித்திரிய பெண் எனவும், பெர்ன் மண்டலத்தில் குடியிருந்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் மேலதிக தகவல்களை பொலிஸ் தரப்பு வெளியிட மறுத்துள்ளது. மேலும், விசாரணை துவக்கப்பட்டுள்ளதாக மட்டும் தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி, சடலத்தில் தலை இல்லை என்பது தொடர்பில் எந்த கருத்தையும் வெளியிட பொலிசார் மறித்துள்ளனர்.

விசாரணை அதிகாரிகளின் கூற்றுப்படி, குற்றச்சம்பவம் நடந்ததிற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்