சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டவர்கள் நால்வருக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
2465Shares

சுவிட்சர்லாந்தில் திடீரென புயல் அடித்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் மூவர் உயிரிழந்துள்ளனர், நான்காவது நபரைக் காணவில்லை.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 4ஆண்கள் மற்றும் 2 பெண்கள் சுவிட்சர்லாந்திலுள்ள Pfäfers என்ற பகுதிக்கருகிலுள்ள பள்ளத்தாக்கு ஒன்றிற்கு சென்றுள்ளார்கள்.

அவர்களில் பெண்கள் இருவரும் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு திரும்பிவிட, ஆண்கள் மட்டும் பள்ளமான பகுதிக்கு சென்றுள்ளார்கள்.

இரவு 7 மணியான பின்னரும் அவர்கள் திரும்பாததால் கவலையுற்ற பெண்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.

இதற்கிடையில் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் கடும் புயல் அடித்ததால், காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

மீண்டும் மறுநாள் காலை தேடும் பணியைத் தொடங்கிய மீட்புக்குழுவினரால் மூன்று பேரின் உயிரற்ற உடல்களைத்தான் கண்டுபிடிக்க முடிந்துள்ளது. நான்காவது நபரைக் காணவில்லை.

வழிகாட்டிகள் யாருடைய உதவியுமின்றி தாங்களாகவே அந்த பகுதிக்கு சென்றுள்ளனர் அந்த சுற்றுலாப்பயணிகள்.

மேலும், புயல் அடிக்கும் என்பதையும் எதிர்பாராததால், வெள்ளத்தில் சிக்கியுள்ளார்கள் அவர்கள்.

உயிரிழந்த மற்றும் காணாமல் போன ஆண்கள், 30, 33, 38 மற்றும் 48 வயதுடையவர்கள் ஆவர்.

அத்துடன், அவர்களுடன் பயணித்த பெண்களில் ஒருவர், உயிரிழந்த சுற்றுலாப்பயணி ஒருவரின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்