சுவிட்சர்லாந்தில் பாராட்டுக்குள்ளான வெளிநாட்டவர்: ஜேர்மனியில் செய்த மோசமான செயல்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
447Shares

ஒரு வெளிநாட்டவர், தான் வாழவந்த நாட்டவர்களோடு இப்படித்தான் இணைந்து வாழவேண்டும் என சுவிட்சர்லாந்தில் பாராட்டுக்குள்ளான ஒரு நபர், ஜேர்மனியில் சிறுவன் ஒருவன் கொலை செய்தார்.

எரித்ரியாவைச் சேர்ந்த Habte Araya, 2006 முதல் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவந்தார்.

2008ஆம் ஆண்டு அவருக்கு சுவிட்சர்லாந்தில் புகலிடம் வழங்கப்பட்டது. சூரிச் மாகாணத்தில் வாழ்ந்து வந்த Arayaவுக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.

உள்ளூர் போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய Araya, உள்ளூர் மக்களோடு வெற்றிகரமாக இணைந்து வாழ்வதற்கு இவர் ஒரு முன்னுதாரணம் என்று அதிகாரிகளால் பாராட்டப்பட்டவர் ஆவார்.

அத்துடன், நல்லபடியாக உள்ளூர் மக்களுடன் இணைந்து வாழ்வது குறித்த சுவிஸ் பிரச்சாரம் ஒன்றில் இவரைத்தான் மாதிரியாக அதிகாரிகள் நிறுத்தினார்கள்.

அப்படியிருக்கும் நிலையில், கடந்த ஜூலை மாதம் ஜேர்மனியின் பிராங்க்பர்ட்டுக்கு வந்த Araya, ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு தாயையும் மகனையும் வேகமாக வரும் ரயில் முன் திடீரென பிடித்துத்தள்ளினார்.

அந்த பெண் சமாளித்து ரயில் பாதையிலிருந்து உருண்டு தப்பிய நிலையில், அந்த எட்டு வயது சிறுவன் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான். இந்த சம்பவம் ஜேர்மனியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜேர்மன் நீதிமன்றம் முன் ஆஜரான Araya, தன்னால் கொல்லப்பட்ட சிறுவனின் குடும்பத்தாரிடம் மனதார மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

தன்னால் தான் செய்த குற்றத்தை நினைவுகூற முடியவில்லை என்று கூறிய Araya, தான் அப்போது கடுமையான மன நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.

குற்றத்திற்குப் பின் Arayaவை பரிசோதித்த மன நல மருத்துவர்கள், அவர், எது உண்மை, எது கற்பனை என்பதை பிரித்தறிய முடியாத paranoid schizophrenia என்னும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரால் தனது செய்கைகளையே கட்டுப்படுத்த இயலாது என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மன நோயால் பாதிக்கப்பட்ட Arayaவால் தனது செய்கைகளை கட்டுப்படுத்தியிருந்திருக்க முடியாது என்பதை பல்வேறு அறிகுறிகள் மூலம் தாங்களே கண்ணால் கண்டதாக நீதிபதிகள் தெரிவித்தார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்