சுவிஸில் இளைஞர்கள் இருவர் மர்ம மரணம்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
970Shares

சுவிஸில் பிரபல ராப் இசைக்கலைஞரின் குடியிருப்பில் இளைஞர்கள் இருவர் மரணமடைந்த சம்பவத்தில் போதை மருந்து காரணம் என தெரியவந்துள்ளது.

ராப் இசைக்கலைஞரின் வளர்ப்பு மகனும் அவரது புதிய தோழி கிம் என்பவருமே மரணமடைந்தவர்கள். இருவருக்கும் 15 வயது.

கடந்த திங்களன்று சூரிச் நகரில் பிரபல ராப் இசைக்கலைஞர் ZH Beats-ன் குடியிருப்பில் இருந்து இளைஞர்கள் இருவரின் சடலமும் மீட்கப்பட்டது.

இதில் ஒருவர் இசைக்கலைஞரின் வளர்ப்பு மகன் டாரியோ எனவும் இன்னொருவர் அவரது தோழி கிம் எனவும் தெரியவந்தது.

கிம் தொடர்பில் தற்போது அவரது நெருங்கிய நண்பர் தெரிவித்த தகவல்கள் வழக்கு விசாரணையை வேறு கோணத்தில் கொண்டு செல்லும் என்றே நம்பப்படுகிறது.

கிம் தமக்கு 4 வயதாக இருக்கும் போதே போதை மருந்துக்கு தாயாரை இழந்தவர்.

தொடர்ந்து தந்தையுடன் வாழப்பிடிக்காமல் சிறார் இல்லத்தில் வளர்ந்தவர். பல முறை தம்மை யாரும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என சிறார் இல்லத்தில் இருந்து வெளியேறி சாலை ஓரங்களில் படுத்து தூங்கியுள்ளார்.

ஆனால் வயதுக்கு வந்த பின்னர் கிம் உண்மையில் பிரச்சனைகளில் சிக்கினார்.

சிறு வயதில் அதிக பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் கிம் பாடசாலையில் தனது திறமையை காட்டினார்.

Thalwil பகுதியில் குடியிருந்த காலகட்டத்தில் போதை மருந்து தொடர்பில் எந்த நாட்டமும் இல்லாத கிம்,

சூரிச் நண்பர்களுடன் போதை மருந்து எடுத்துக் கொள்ள் தொடங்கினார். இது அவரை போதை மருந்துக்கு அடிமையாகவே மாற்றியுள்ளது.

பாடசாலையில் இருந்து அடிக்கடி காணாமல் போனார். இந்த நிலையிலேயே சிறார் இல்லத்தில் இருந்து Zug பகுதி குடும்பம் ஒன்றால் தத்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையிலேயே தமது புதிய நண்பர்களில் ஒருவரான டாரியோவுடன் ஞாயிறன்று சடலமாக மீட்கப்பட்டார்.

டாரியோவின் குடியிருப்பில் கிம் காணப்பட்டது தமக்கு குழப்பமாக இருந்தது என கூறும் அந்த நண்பர்,

கிம் கண்டிப்பாக இறக்க வேண்டும் என திட்டமிட்டு இருக்க வாய்ப்பில்லை. அவர் வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற ஆசை கொண்டவர்.

டாரியோ உடனான போதை மருந்து சம்பவம் கண்டிப்பாக ஒரு விபத்தாக இருக்கவே வாய்ப்பு என கண்கலங்கியபடி தெரிவித்துள்ளார் கிம்மின் நெருங்கிய நண்பர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்