புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட வெளிநாட்டவர் ஒருவர் சுவிஸ் மாணவி ஒருவரை வன்புணர்வு செய்த குற்றத்திற்காக சிறை செல்கிறார்.
சூரிச்சில் மாணவி ஒருவரின் குடியிருப்புக்குள் நுழைந்த அந்த 34 வயது நபர், அந்த மாணவியை வன்புணர்வு செய்துள்ளார்.
நேற்று சூரிச் மாகாண நீதிமன்றம் அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததோடு, 15 ஆண்டுகளுக்கு அவர் சுவிட்சர்லாந்துக்குள் நுழைய தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்துவந்த அந்த நபர், அந்த பெண் தனக்கு தெரிந்தவள் என்றே கூறிவந்த நிலையில், முதன்முறையாக நேற்று நீதிமன்றத்தில் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், அந்த பெண்ணிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.
அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த நீதிபதிகள், தண்டனைக்குப்பின் அவரை நாடு கடத்த உத்தரவிட்டனர்.
அத்துடன் அவரது பெயர் Schengen தகவல் டேட்டாபேசில் பதிவுசெய்யப்படும் என்பதால், 15 ஆண்டுகளுக்கு அவரால் Schengen பகுதியில் அமைந்துள்ள எந்த நாடுகளுக்குள்ளும் நுழைய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.