இவரை எங்கோ பார்த்தமாதிரி இருக்கிறதே என்று தோன்றுகிறதா?: உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஒருவரைப் பார்த்ததும், இந்த முகத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறோமே என்று யோசித்து, சரியாக அவர் யார் என்று கண்டுபிடிக்கக்கூடியவர்களுக்கு சுவிஸ் பொலிசார் ஒரு நல்ல செய்தி வைத்திருக்கிறார்கள்.

‘Super Recognisers’ என்று அழைக்கப்படும் இத்தகைய மக்கள் ஏற்கனவே லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸ் மற்றும் சில ஜேர்மன் பொலிஸ் பிரிவுகளில் இருக்கிறார்கள்.

முகத்தை அடையாளம் கண்டுபிடிக்கும் கணினிகளைவிட இவர்கள் சிறப்பாக வேலை செய்வதாக சூரிச் பொலிசார் நம்புகிறார்கள்.

இந்த ‘Super Recognisers’ என்பவர்கள், ஒரு கணம் மட்டும் ஒருவரை ஏற்கனவே பார்த்திருந்தாலும், சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களை கண்டுபிடிக்கும் திறன்கொண்டவர்கள்.

மேலும், குழந்தையாக பார்த்த ஒருவரை, அவர் வளர்ந்த பிறகும் அடையாளம் காணும் திறனும் இவர்களுக்கு இருக்கும்.

ஆகவே, காணாமல் போனவர்கள், தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் போன்றவர்களை கண்டுபிடிக்க பொலிஸ் துறைக்கு இவர்கள் பேருதவியாக இருப்பார்கள் என்பதால் அத்தகையவர்களுக்கு பணி வழங்க பொலிஸ் துறை தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள் சூரிச் பொலிசார்.

இன்னொரு முக்கிய விடயம், இந்த கண்டுபிடிக்கும் திறன் இயற்கையாகவே அமைந்திருக்குமே தவிர, அதை பயிற்சி கொடுத்து ஒருவருக்கு கற்றுக்கொடுக்க முடியாது என்றும் கருதப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்