ஜெனீவா ஏரியில் முதலை தென்பட்டதால் பதற்றம்: தீயணைப்பு வீரர்கள் அதை பிடித்தபோது...

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

ஜெனீவா ஏரியில் முதலை ஒன்றைப் பிடித்தபடி தீயணைப்பு வீரர்கள் நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த முதலையை செல்லப்பிராணியாக வளர்த்த யாரோ அதை ஏரியில் விட்டுவிட்டதாக வதந்தி பரவியது.

ஜெனீவா ஏரியில் முதலை ஒன்று தென்படுவதாக தகவல் கிடைத்தபோது தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்ததென்னவோ உண்மைதான், அந்த படமும் உண்மைதான்! ஆனால், அந்த முதலை உண்மையான முதலை அல்ல, அது ஒரு பிளாஸ்டிக் முதலை பொம்மை...

பரபரப்பை ஏற்படுத்திய அந்த முதலை இப்போது குப்பைத் தொட்டிக்கு சென்றுவிட்டது. அதனால், மக்கள் அந்த முதலையைக் குறித்த பயமின்றி நிம்மதியாக இருக்கலாம்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்