சுவிற்சர்லாந்தில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சர்வஐன வாக்கெடுப்பு

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து

சுவிற்சர்லாந்தில் செப்டம்பர் மாதம் 27 ம் திகதி நடைபெற இருக்கும் மற்றும் ஒரு சர்வஐன வாக்கெடுப்பு

குழந்தை பிறப்பிற்கான தந்தையர் விடுமுறை வாக்கெடப்பு. கோரானா தொற்று ஆரம்பத்தில் அனைத்தும் முடக்கப்பட்ட வேளையில் ஓர் குடும்பத்தில் தமது குழந்தைகளை பராமரிப்பதில் தந்தையின் பங்கும் எவ்வளவு இன்றியமையாது என்பதனை பல அனுபவங்கள் நிரூபித்து உள்ளன.

வளர்ந்துவரும் நாகரிக உலகில் பெண்கள் தொழில்களிற்கு சென்றும் வீட்டில் குழந்தையை பராமரிக்க புதிய சூழ்நிலைகள் ஏற்பட்டுவருகின்றது.

முன்னர் போல் தாயானவள் ஊதியமற்ற குழந்தைபராமரிப்பு வீட்டுவேலைகைள செய்பவராக மட்டும் இல்லாது தாமும் தொழில் புரிந்து வருகின்றனர்.

மகப்பேறு வேளையில் தயாரிற்கான மகப்பேற்றிற்கான விடுமுறைகள் கொடுக்கபடுகின்றது. தந்தையரிற்கு தனியே ஒரு இரு தினங்கள் மட்டுமே கொடுக்கப்படுகின்றது.

குழந்தை வளர்ப்பு தனியே பெண்ணிற்கு மட்டும் உரியதில்லை ஆணிற்கும் சம பங்குள்ளது.

தற்பொழுது பெரிய ஒரு சிலநிறுவனங்கள் தந்தையரிற்கான இருவார விடுமுறைகள் கொடுத்து வருகின்றன.

அவ்வகையில் நடைபெறப்போகும் அபிப்பிராய வாக்கெடுப்பானது சிறிய பெரிய நிறவனங்கள் தனது ஆண் தொழிலாளர்களிற்கு மகப்பேறு வேளையில் இருவார விடுமுைறயினை வலியுறுத்துகின்றது.

இரு வாரங்களிற்கான விடுமுறைக்கான செலவு தனியே இரண்டு கப் கோப்பிக்கானது மட்டுமானது.

இவ்வகையில் வழங்கப்பட விருக்கும் விடுமுறை இளம் தொழிலாளர்களை உள்வாங்குவதற்கான அல்லது ஈர்ப்பதற்கான வழிமுறையாகும்.

ஏனைய ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும்போது சவிற்சர்லாந்து கற்காலத்தில் உள்ளது, இது தனியே வெட்கப்படும் விடயம் மட்டுமல்ல, மேலும் வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கான முட்டுக்கட்டையுமாகும், தந்தையர்களிற்கான மகப்பேறு விடுமுறை நாகரிகமான சமத்துவமான குடும்ப அமைப்புகளிற்கு உதவும்.

நிறுவனங்கள் தமது தொழிலாளரகளிற்கான முன்னேற்றமான ஓப்பந்தங்களை ஏற்படுத்திகொள்ள உதவும். தந்தையர்களின் மகப்பேற்றிற்கான விடுமுறை அனைத்து தொழிலாளர்களிற்கான உரிமை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்