பொலிசார் ஒருவர் தன்னைத்தானே எடுத்துக்கொண்ட வீடியோ வைரலானதால் சிக்கல்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
307Shares

சூரிச்சில் பொலிசார் ஒருவர் தன்னைத்தானே எடுத்துக்கொண்ட வீடியோ வைரலானது அவருக்கே பிரச்சினையாக முடிந்துள்ளது.

Stefen (53) என்னும் அந்த பொலிசார், புதிதாக வழங்கப்பட்ட ரோந்து காரை செலுத்த நேர்ந்துள்ளது.

புதிய காரை ஓட்ட வாய்ப்பு கிடைத்ததால் குஷியான Stefen, கார் ஓட்டும்போதே, தான் கார் ஓட்டுவதை வீடியோ எடுத்துள்ளார்.

இந்த கார் மிகவும் அருமையாக உள்ளது, எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றெல்லாம் வர்ணித்தபடியே கார் ஓட்டுவதை Stefen வீடியோ எடுக்க, அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

உண்மையில் இந்த சம்பவம் நடந்தது 2018இல், ஆனால், தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது. அதைத் தொடர்ந்து Stefen விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை அவர் செய்தது சாதாரண குற்றமல்ல, கார் ஓட்டும்போது மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படலாம் அல்லது ஓட்டுநர் உரிமமே ரத்துசெய்யப்படலாம்.

ஆனால், இது எப்போதோ நடந்த சம்பவம் என்றும், தனக்கு அந்த சம்பவம் குறித்து நினைவே இல்லை என்றும் தெரிவித்துள்ளார் Stefen. சூரிச் மாகாண பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்