சுவிட்சர்லாந்தில் குடியிருப்புக்குள் அத்துமீறி பெண் ஒருவரை கொடூரமாக தாக்கி மரணமடைய காரணமான இளைஞர் தொடர்பில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் St. Gallen மண்டலத்தில் புதனன்று மதியம் ஒரு குடியிருப்புக்குள் அவசர அவசரமாக புகுந்த பொலிசார் இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்றதுடன் பெண்மணி ஒருவரை குற்றுயிராக மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.
குறித்த 42 வயது பெண்மணி அதே நாள் மாலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பகீர் பின்னணி தகவல்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
இளைஞர் ஒருவரால் பெண்மணி தாக்கப்படுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார்,
குறித்த 22 வயது இளைஞரை பல முறை எச்சரித்ததுடன், அவர் கையில் இருந்த இரும்பு தண்டை விட்டுவிடவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் பொலிசாரின் எச்சரிக்கையை அந்த இளைஞர் கண்டுகொள்ளாத நிலையில், துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் குறித்த இளைஞர் சம்பவயிடத்திலேயே பலியானாதாக தெரிய வந்துள்ளது.
உளவியல் பாதிப்பு கொண்ட அந்த இளைஞர் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் அல்ல எனவும், குடியிருப்புக்குள் நுழைய வாய்ப்பு கிடைத்ததால் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தமது பேஸ்புக் பக்கத்தில் தாமே பாடிய பாடல் ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில் துப்பாக்கியுடன் வருவேன், வந்து அனைவரையும் கொல்வேன் என அவர் பாடியிருந்துள்ளார்.
மட்டுமின்றி வெளிநாட்டவர்களாலையே, சுவிட்சர்லாந்தின் பாரம்பரியம் கலாச்சாரம் சீரழிந்துள்ளதாகவும் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தாம் ஒரு பெருமைமிக்க இஸ்லாமியர் என்றும் பழுப்பு நிற தோலுடைய அனைவருக்கும் ஆதரவாக இருப்பேன் என்றும் அறிவித்துள்ளார்.