சுவிற்சர்லாந்தில் கொரோனா அச்சத்துக்கு மத்தியில் பக்தி பூர்வமாக நடைபெற்ற குடமுழுக்கு விழா

Report Print Dias Dias in சுவிற்சர்லாந்து
1853Shares

ஐரோப்பாவில் பிரசித்திபெற்ற ஆலயமாக விளங்கும் சுவிற்சர்லாந்து செங்காளன் மாநில சென்மார்க்கிரெத்தன் அருள்மிகு ஸ்ரீ ‌‌கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

கடந்த திங்கட்கிழமை (31.08.2020) காலை சுபநேரத்தில் மிகவும் பக்தி பூர்வமாகவும் இடம்பெற்றது.

ஆலயம் ஆரம்பிக்கப்பட்டு 12 வது வருடத்தில் ஆலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு, 2 வது தடவையாக கும்பாபிஷேகம் இடம்பெற்றுள்ளது.

கும்பாபிஷேகத்தை ஒட்டிய கிரியைகள் கடந்த 24 ஆம் திகதி கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து ஒன்பது நாட்கள் இடம்பெற்றன.

கும்பாபிஷேக தினமான 31.08.2020 அன்று அதிகாலை 4:30 மணிக்கு கணபதி வழிபாட்டுடன் ஆரம்பமாகி யாகபூசை, மஹா பூர்ணாகுதி, தீபாராதனை இடம்பெற்று பிரதான கும்பங்கள் உள்வீதி, வெளிவீதி வலம் வந்து காலை 7:30க்கும் 8 மணிக்கும் இடையில் சுந்தரவிமானம் உட்பட அனைத்து கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து திருக்கதவ பாடல் சமர்ப்பணம், தச தரிசனம், தீபாராதனை ஆகியவற்றுடன் கும்பாபிஷேகம் பூர்த்தியானது.

இதேவேளை, சுவிஸ் நாட்டில் கொரோனா பரவலினால் கட்டுப்பாடுகள் பல இருக்கும் நிலை சட்டத்திட்டங்களுக்கு அமைவாக மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்