10 ஆண்டுகளாக குழந்தைகளை பூமிக்கு கீழ் உள்ள அறையில் அடைத்து பட்டினி போட்ட பெற்றோர்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சூரிச்சில் பல ஆண்டுகளாக தங்கள் குழந்தைகளை பட்டினி போட்டு கொடுமைப்படுத்திய பெற்றோர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

சூரிச்சிலுள்ள ஒரு குடும்பத்தில் 7 பிள்ளைகள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் 5 பேரை பல ஆண்டுகளாக பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கிவந்துள்ளனர் அவர்களின் பெற்றோர்.

ஆனால், இப்போது விடயம் வெளியில் வந்ததும் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டிக்கொள்கிறார்கள்.

குழந்தைகளை பூமிக்கடியிலுள்ள அறை ஒன்றில் பல நாட்களாக அடைத்துவைத்து பல நாட்கள் பட்டினி போட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தற்போது 49 வயதுள்ள அந்த கணவனுக்கு பதினாறரை ஆண்டுகளும் மனைவிக்கு 12 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்புக்குப் பின் குழந்தைகள் அரசு காப்பகத்தில் அனுமதிக்கப்படலாம். இதற்கிடையில், 10 ஆண்டுகளுக்கு முன்பே, அந்த குழந்தைகள் பட்டினியாக பள்ளிக்கு வருவதாக பள்ளி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் அதை யாரும் பெரிதகா எடுத்துக்கொண்டது போல் தெரியவில்லை. விசாரணையை மேற்கொண்டுள்ள நீதிபதி, அதிகாரிகள் பக்கம் தவறு இருப்பதை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்