பிரான்சிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு போகலாம் ஆனால் போகக்கூடாது!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்துக்கு பிரான்ஸ் நாட்டவர்கள் போகலாம், ஆனால் போகக்கூடாது. என்ன குழப்பமாக இருக்கிறதா? ஆம், சுவிஸ் அதிகாரிகளும் குழப்ப நிலையில்தான் இருக்கிறார்களாம்! அதாவது, பிரான்சில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா தொற்று அதிகரித்தவண்ணம் உள்ளது.

ஆனால், பிரான்சிலிருந்து எல்லை தாண்டி வரும் பணியாளர்களை பெருமளவில் நம்பியுள்ளது சுவிட்சர்லாந்து, குறிப்பாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவா, வாட் மற்றும் பேசல் ஆகிய பகுதிகள்.

அத்துடன், பிரான்சும் சுவிட்சர்லாந்தும் ஜெனீவா விமான நிலையத்தை பகிர்ந்துகொள்கின்றன.

ஜெனீவாவின் மருத்துவத்துறையில் பணி புரியும் பல மருத்துவப் பணியாளர்கள் பிரான்சிலிருந்து வருகிறார்கள்.

ஆகவே, பிரான்ஸ் நாட்டவர்கள் சுவிட்சர்லாந்துக்குள் நுழைவதற்கு சுவிட்சர்லாந்தால் முழுமையாக தடை விதிக்க முடியாது.

ஆனால், கொரோனா தொற்றையும் கருத்தில் கொள்ளத்தான் வேண்டும். என்ன செய்வது?

ஒன்று செய்யலாம், பிரான்சில் எங்கெல்லாம் அதிகம் கொரோனா தொற்று உள்ளதோ, உதாரணமாக பாரீஸ் போன்ற பகுதிகள், அதுபோன்ற பகுதிகளிலிருந்து வருபவர்களை மட்டும் சுவிட்சர்லாந்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தலாம்.

ஆனால், சுவிட்சர்லாந்தின் எந்த பகுதிகளுக்கு அதிகம் பேர் பிரான்ஸ் நாட்டிலிருந்து வருகிறார்களோ, அங்கேயே அதிக கொரோனா தொற்று காணப்படுகிறது, அதாவது ஜெனீவா மற்றும் வாட் ஆகிய பகுதிகளில். ஆக, அதுவும் குழப்பம்தான்... எனவே, என்ன செய்யலாம் என முடிவு செய்வதற்காக சுவிட்சர்லாந்து அரசு வரும் வெள்ளிக்கிழமை, அதாவது செப்டம்பர் 11, 2020 அன்று கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்