கோடிக்கணக்கில் வங்கியில் சும்மா இருக்கும் பணம்... நாட்டை நடத்த அதிரடி திட்டம் போடும் சுவிஸ் நாட்டவர்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் பொருளாதார நிபுணர் ஒருவர், நாட்டின் தேசிய வங்கியில் ஒரு இலட்சம் கோடி சுவிஸ் ஃப்ராங்குகள் சும்மா இருக்கிறது, அதை மக்களுக்கு திரும்பக் கொடுங்கள் என்கிறார்.

கொரோனா எதிர்ப்பு அமைப்பு ஒன்றுடன் தொடர்புடையவரான Francois de Siebenthal (65) என்னும் அந்த பொருளாதார நிபுணர், சுவிட்சர்லாந்து அரசு நாட்டை நடத்தும் முறையையே மாற்றும் ஒரு திட்டம் தொடர்பான மசோதா ஒன்றை வாக்களிப்பிற்காக முன்வைக்க இருக்கிறார்.

வரியே போடாமல் நாட்டை நடத்தும் திட்டம் ஒன்று தன்னிடம் இருப்பதாக தெரிவிக்கிறார் Francois.

வரி முறையையே ஒழித்துவிட்டு, மக்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஒரு அடிப்படை வருவாய் ஒன்றை அளிக்க விரும்புவதாக தெரிவிக்கிறார் அவர்.

சரி, அப்படி ஒரு ஊதியம் அளிக்கவேண்டுமானால், அதற்கும் பணம் வேண்டுமே, அதற்கு என்ன செய்வது என்றால், மைக்ரோ வரி என்னும் ஒரு திட்டத்தை முன் வைக்கிறார் அவர்.

அதாவது நாட்டில் நடக்கும் அனைத்து பணப்பரிவர்த்தனைகளின்போதும், சிறிய அளவு வரிப்பிடித்தம் ஒன்றை செய்வதன் மூலம் அதையும் நிறைவேற்றலாம் என்கிறார் Francois.

Francois, வாட் மாகாணத்தில் ஏற்கனவே இருமுறை தேர்தலில் நின்று தோற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்