நீச்சல் குளத்தில் விழுந்த சிறுவன்: உண்மை தெரியவந்ததால் திசை மாறியுள்ள வழக்கு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சலாந்தில் 9 வயது சிறுவன் ஒருவன், நீச்சல் குளத்தில் 5 மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குதிக்கும் பலகையிலிருந்து விழுந்துவிட்டான்.

St. Gallen நகரில் நடந்த இந்த சம்பவத்தில், கீழே விழுந்த சிறுவன் நீச்சல் குளத்தின் ஓரம் அமைந்துள்ள சிமெண்ட் தளத்தில் மோதியதில், அவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

ஆகத்து மாதம் விழுந்த சிறுவன் இன்னமும் மருத்துவமனையில் இருக்கும் நிலையில், இந்த சம்பவம் ஒரு விபத்தாக கருதப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது அவன் தானாக விழவில்லை, அவன் தள்ளிவிடப்பட்டுள்ளான் என்பது தெரியவந்துள்ள நிலையில், பொலிசார் வழக்கை குற்றவியல் வழக்காக மாற்றியுள்ளார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்