சட்டவிரோத அமைப்புடன் தொடர்பு... வன்முறையில் ஈடுபாடு: சுவிஸ் இளைஞருக்கு சிக்கல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக இளைஞர் ஒருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமான நிலையில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சூரிச் மண்டலத்தின் Winterthur நகரை சேர்ந்தவர் தண்டனை பெற்ற அந்த 34 வயது நபர்.

சட்டவிரோத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகவும், வன்முறை செயல்களில் ஈடுபாடு கொண்டதாகவும் கூறி தொடரப்பட்ட வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபணமாகியுள்ளது.

இந்த நிலையில் அந்த நபருக்கு 50 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவருடன் வழக்குப் பதியப்பட்ட 37 வயதான இன்னொரு நபருக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறார்கள் மீதான துஸ்பிரயோகம், வன்முறையை தூண்டுதல் மற்றும் வன்கொடுமை உள்ளிட்டவைகளில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் நிரூபணமாகியுள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதம் இந்த வழக்கு தொடர்பில் முக்கிய விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், அரசு சார்பில் இவர்கள் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள், 6 மாதங்கள் மற்றும் 34 மாதங்கள் என தண்டனை விதிக்க கோரப்பட்டது.

முக்கிய குற்றவாளியான அந்த 34 வயது நபர் சிரியாவுக்கு இளைஞர்களை அனுப்பியதாகவும், இவரே கடந்த 2013 நவம்பர் முதல் டிசம்பர் 9 ஆம் திகதி வரை சிரியாவில் தங்கியிருந்ததாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்