சுவிஸ் முதியோர் இல்லங்களை ஆட்டி படைக்கும் கொரோனா

Report Print Basu in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் உள்ள இரண்டு முதியோர் இல்லங்களை கொரோனா வைரஸ் ஆட்டி படைத்து வருகிறது.

இரண்டு முதியோர் இல்லங்ளில் 90 பேருக்கு கொரோனா உறுதியானது, மேலும் 8 பேர் இறந்துள்ளனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Fribourg மாகாணத்தில் உள்ள Siviriez முதியோர் இல்லத்தில் மொத்தம் 37 குடியிருப்பாளர்கள் மற்றும் 19 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானது, மேலும் ஏழு பேர் இறந்துவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அருகிலுள்ள Maison Bourgeoisiale இல்லத்தில், 21 குடியிருப்பாளர்கள் மற்றும் 13 ஊழியர்கள் கொரோனா உறுதி செய்துள்ளனர், அதே நேரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா பரவியதை அடுத்து இல்லங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் சில குடியிருப்பாளர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உள்ளூர் பாதுகாப்பு படைகள் உதவுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் 45,000-க்கும் மேற்பட்ட கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன, மேலும் 1,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்