டயானா சமாதியில் இருந்த சிலுவை மாயம்: கடும் அதிருப்தியில் குடும்பம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் சாலை விபத்தில் பலியான சிறுமி டயானாவின் சமாதியில் இருந்த சிலுவை மாயமானதாக குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

சூரிச் மண்டலத்தில் Brütten பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கி 4 வயது சிறுமி டயானா பரிதாபமாக பலியானார்.

அவரது சமாதியில் சிலுவை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த சிலுவை மாயமாகியுள்ளதாக சிறுமி டயானாவின் தாத்தா புகார் அளித்துள்ளார்.

மேலும், சிலுவையை நாம் அகற்றிவிட்டோமா என அவர் தமது மகனிடம் விசாரித்துள்ளார், ஆனால் அவர் மறுத்துள்ளார்.

இந்த விவகாரம் தங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாகவும், கோபத்தை ஏற்படுத்தியதாகவும், மொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

எவரேனும் அந்த சிலுவையை திருடிச் சென்றால் தயவு செய்து திரும்ப அதே இடத்தில் வைத்துவிட கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்