ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை முறித்துக்கொள்ளும் மற்றொரு நாடு?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
8609Shares

ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தங்களை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, சுவிஸ் மக்கள், வரும் 27ஆம் திகதி (27.9.2020) வாக்களிக்க உள்ளார்கள்.

உண்மையில், அன்று, பல விடயங்களை முடிவு செய்வதற்காக சுவிட்சர்லாந்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

போர் விமானங்கள், வேட்டையாடுதல், குழந்தைகள் நலனுக்கான வரி குறைப்பு மற்றும் குழந்தை பிறந்தால் தந்தைக்கும் பிரசவ விடுப்பு கொடுப்பது வரையிலான பல விடயங்களை மக்கள் அன்று முடிவு செய்ய இருக்கிறார்கள்.

அவற்றில் மிக முக்கியமானது, ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையில்லா போக்குவரத்து தொடர்பான ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதைக் குறித்த விடயமாகும்.

சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடு அல்ல, ஆனால் சில ஒப்பந்தங்கள் மூலம் அது ஐரோப்பிய ஒன்றியத்துடன் உறவு வைத்துக்கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

அப்படிப்பட்ட ஒப்பந்தங்களில் ஒன்று தடையில்லா போக்குவரத்து ஒப்பந்தம் ஆகும். அந்த தடையில்லா போக்குவரத்து ஒப்பந்தம் அமுலில் இருப்பதால், ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள உறுப்பு நாடுகளைச் சார்ந்த மக்கள் சுவிட்சர்லாந்துக்கு வந்து அங்கு வாழலாம், வேலை செய்யலாம் மற்றும் கல்வியும் பயிலலாம்.

அதேபோல், சுவிஸ் குடிமக்களும் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள உறுப்பு நாடுகளுக்குச் சென்று அங்கு வாழலாம், வேலை செய்யலாம் மற்றும் கல்வியும் பயிலலாம்.

இந்த தடையில்லா போக்குவரத்து ஒப்பந்தத்துடனேயே செய்யப்பட்டுள்ள முக்கியமான மற்றொரு ஒப்பந்தம், ஒற்றைச் சந்தை முறை ஒப்பந்தம், அதாவது ஐரோப்பிய ஒன்றியத்துடன் சுவிட்சர்லாந்து நேரடி வர்த்தக உறவு வைத்துக்கொள்வதாகும். 2000ஆவது ஆண்டில், இந்த ஒப்பந்தங்களுக்கு ஆதரவாக 67.2% சுவிஸ் வாக்காளர்கள் ஆதரவளித்தார்கள்.

அப்படியிருக்கும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையில்லா இயக்கம் தொடர்பான ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக மசோதா ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இப்போது, அந்த மசோதாவை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பது குறித்து 27.9.2020 அன்று மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்.

இப்போது பிரச்சினை என்னவென்றால், தடையில்லா போக்குவரத்து ஒப்பந்தம் முடிவுக்கு வந்தால், அதனுடனேயே தடையில்லா போக்குவரத்து ஒப்பந்தத்துடன் தொடர்புடைய இந்த

ஒற்றைச் சந்தை முறை ஒப்பந்தம் முதலான ஆறு ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்துவிடும்.

இது பிரெக்சிட்டைப்போல் சுவெக்சிட்டை (Swexit) உருவாக்கிவிடும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.

ஆனால், இந்த ஒப்பந்தங்களை முடிவுக்கு கொண்டு வரும் விடயத்துக்கு பின்னால் இருப்பவர்கள், தற்போது சுவிட்சர்லாந்தில் அதிக அளவில் புலம்பெயர்தல் பிரச்சினை

இருப்பதாகவும், அதனால் சுவிஸ் மக்களுக்கு வேலையில்லாத்திண்டாட்டம் அதிகரிப்பதாகவும், அவர்களுடைய செழிப்பு, சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கருதுகிறார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்