அமெரிக்க காடுகளில் பற்றியெரியும் தீ... சுவிட்சர்லாந்து வரை பறந்து வந்த சாம்பல்: ஆச்சரியமா ஆபத்தா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

அமெரிக்காவில் காட்டுத்தீ பற்றி எரிந்து வரும் நிலையில், அங்கிருந்து உருவாகும் சாம்பல் துகள்கள் சுவிட்சர்லாந்து வரை வந்துள்ளன.

வானிலை ஆராய்ச்சியாளரான Lionel Fontannaz கூறும்போது, மேற்கு அமெரிக்க வனப்பகுதியில் பற்றியெரியும் தீயிலிருந்து பறந்து வரும் சாம்பல் துகள்கள், சுவிட்சர்லாந்திலுள்ள Jungfraujoch பகுதி வரை வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த துகள்களின் அளவு 8 மைக்ரோகிராமாக உள்ளது.

10 மைக்ரோகிராமுக்கு அதிக அளவு கொண்ட துகள்கள் காற்றில் இருந்தால், அது காற்று மாசு என கருதப்படும் நிலையில், இந்த கண்டுபிடிப்பு ஆச்சரியமா ஆபத்தா என்பது தெரியவில்லை.

அமெரிக்க வனப்பகுதியில் எரியும் தீயிலிருந்து உருவான சாம்பல் துகள்கள், காற்றின் மூலம் அட்லாண்டிக் வழியாக பறந்து செல்வதை சேட்டிலைட் மூலம் காண இயலும் என்கிறார் Fontannaz.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்