சுவிட்சர்லாந்தில் இந்த பகுதிகளில் இனிமேல் நாய்களுக்கு தடை

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் அதிகரித்துவரும் நாய்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு புதிய தடை உத்தரவை அமுலுக்கு கொண்டுவர நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி சூரிச் நகரின் 72 பகுதிகளை தெரிவு செய்து, அங்கே நாய்களுக்கு அனுமதி உண்டு அல்லது இல்லை என்ற பதாகையை நிறுவ உள்ளனர்.

இந்த புதிய நடைமுறையானது எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் அமுலுக்கு கொண்டுவரப்படும் என தெரிய வந்துள்ளது.

நாய் உரிமையாளர்கள் மற்றும் நாய் உரிமையாளர்கள் அல்லாதவர்களுடன் இணைந்து இந்த முடிவுகளை எடுக்கப்பட்டுள்ளதாக நகர நிர்வாகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

நகரில் நாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. நாய்களுடன் பயணம் செய்பவர்களுக்கும் பிறருக்கும் அடிக்கடி மோதல் போக்கு ஏற்படுவது வாடிக்கையாகவே உள்ளது.

தற்போது முன்னெடுக்க முடிவு செய்துள்ள இந்த திட்டம் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவை கொண்டுவரும் என நம்புவதாக பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் மத்தியாஸ் நின்க் தெரிவித்துள்ளார்.

இதன்பொருட்டு பூங்காக்கள் உள்ளிட்ட மொத்தம் 210 பகுதிகளை ஆய்வு செய்ததாகவும், அதில் 72 இடங்களில் பதாகைகள் நிறுவ முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாய்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகள்:

  • Pestalozzianlage
  • Allmend / Brunau
  • Arboretum
  • Zürichhorn, lakeside facilities
  • City garden

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்