குழந்தையின் இறுதிச் சடங்கின்போது சேகரிக்கப்பட்ட பணம்: மர்ம நபர் செய்த மோசமான செயல்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் 5 வயது குழந்தை ஒன்றின் இறுதிச்சடங்கின்போது சேகரிக்கப்பட்ட பணத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டாவோசில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் இறந்துபோக, இந்த வாரம் அவனது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அவனது மரணத்தையொட்டி, கல்லீரல் நோயால் வருந்தும் சிறுவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனம் ஒன்றிற்காக பணம் சேகரிக்கப்பட்டது.

ஆனால், நிகழ்ச்சி முடிந்த நிலையில் யாரோ ஒருவர் அந்த பணத்தை திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த அந்த சிறுவனின் குடும்பத்தினர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அந்த திருட்டு தங்களை கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இறுதிச்சடங்கின்போது, நல்லெண்ண நோக்கத்திற்காக குழந்தைகளுக்காக சேகரிக்கப்பட்ட பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொலிசார் cheapஆக நடந்துகொண்ட அந்த திருடனை தேடி வருகின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்