பைக்குள் துண்டிக்கப்பட்ட தலை: சுவிஸில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வழக்கில் புதிய திருப்பம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் துர்காவ் மண்டலத்தில் பைக்குள் துண்டிக்கப்பட்ட தலையுடன் கைதான இளைஞரை நாடு கடத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

துர்காவ் மண்டலத்தின் Frauenfeld பகுதியில் கடந்த 2018 அக்டோபர் மாதம் குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது.

இந்த வழக்கில் தொடர்புடைய இளைஞர் அப்பாவி எனவும் அவருக்கு உளவியல் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் நடக்கும்போது 19 வயதேயான அந்த இளைஞர் தமது 74 வயதான பாட்டியின் கழுத்தை நெரித்துள்ளார்.

இதனால் அந்த முதியவர் சுயநினைவை இழந்து சரிந்துள்ளார். தொடர்ந்து சமையலறை கத்தியால் அவரது மார்பில் குத்தியுள்ளார்.

இதனால் அந்த மூதாட்டி மரணமடைந்துள்ளார். தொடர்ந்து பாட்டியின் கழுத்தை வெட்டிய அந்த இளைஞர், அதை பைக்குள் பாதுகாப்பாக வைத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், சம்பவம் நடந்தபோது அந்த இளைஞருக்கு கடுமையான உளவியல் பாதிப்பு இருந்தது எனவும்,

இதனால் அவரை குற்றவாளி என கூற எந்த முகாந்திரமும் இல்லை என நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர்.

தற்போது 21 வயதாகும் அந்த இளைஞருக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் சிகிச்சைக்கு பின்னர் அந்த இளைஞர் 15 ஆண்டுகள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்