சுவிட்சர்லாந்து மாகாணம் ஒன்றில் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.
சுவிட்சர்லாந்தின் Vaud மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில்தான் இந்த நிலை. Vaud மாகாணத்தில் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் சில நோயாளிகளை நாட்டின் வேறு பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பும் திட்டம் உள்ளதாக Vaud மாகாண மருத்துவமனை இயக்குநரான Philippe Eckert தெரிவிக்கிறார்.
ஆனால், இது சுவிட்சர்லாந்தில் கொரோனாவின் இரண்டாவது அலையா என்ற கேள்விக்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.