சுவிஸில் பெண்கள் இருவரை கொன்று தற்கொலை செய்து கொண்ட நபர்: வழக்கில் முக்கிய திருப்பம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
4350Shares

சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் பிணைக்கைதிகள் இருவரை கொன்று நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் பொலிசார் விசாரணையை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மே மாதம் சூரிச் மண்டலத்தின் Döltschiweg பகுதியில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியது.

குறித்த வழக்கில் முக்கிய குற்றவாளியே தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இந்த வழக்கில் மூன்றாவது நபருக்கு தொடர்பு இல்லை என்பது தீவிர விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கை முடித்துக் கொள்வதாக விசாரணை அதிகாரிகள் தரப்பு அறிவித்துள்ளது.

சம்பவத்தன்று Döltschiweg பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் 60 வயதான நபர் தமது முன்னாள் மனைவி மற்றும் அந்த குடியிருப்பில் வாடகைக்கு தங்கியிருந்த செ குடியரசு நாட்டவரான 38 வயது பெண்மணியையும் பிணைக்கைதியாக பிடித்துள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், அந்த குடியிருப்பை சுற்றி வளைத்தனர். மட்டுமின்றி அந்த நபருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஆனால் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில், அந்த நபர் முதலில் தமது குடியிருப்பில் தங்கியிருந்த பெண்மணியை சுட்டு கொலை செய்துள்ளதுடன், தொடர்ந்து தமது முன்னாள் மனைவியை கொன்றுள்ளார். இதனையடுத்து தாமும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

முதலில் பிணைக்கைதிகளை விடுவிப்பதாக அந்த நபர் கூறியதை அடுத்து, பொலிசார் குடியிருப்புக்குள் வலுக்கட்டாயமாக நுழையும் முடிவை கைவிட்டனர்.

ஆனால் எவரும் எதிர்பார்க்காத நிலையில் அந்த நபர் துப்பாக்கியால் சுட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்