உயிருடன் இருப்பது தெரிந்தால் போதும்: சுவிஸில் சகோதரர் தொடர்பில் சகோதரி வெளியிட்ட உருகவைக்கும் பதிவு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
2481Shares

சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் காணாமல் போன சகோதரர் தொடர்பில் உருகவைக்கும் பதிவை அவரது சகோதரி வெளியிட்டுள்ளார்.

சூரிச் மண்டலத்தின் Horgen பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞர் தொடர்பில் கடந்த மூன்று வாரங்களாக எந்த தகவலும் இல்லை.

இந்த நிலையில் அவரது சகோதரி தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

எங்களுக்கு அவர் நன்றாக இருக்கிறாரா என்பது தெரிந்தால் போதும். குடியிருப்புக்கு வர விரும்பவில்லை என்றால், திரும்ப தேவையில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா என்பது மட்டும் தெரிந்தால் போதும் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் இரட்டையர்களில் ஒருவரான அவரது சகோதரி.

இதுநாள் வரை அவர் தாயாருடனே வசித்து வந்துள்ளார். தற்போது அவர் காணாமல் போயுள்ள நிலையில், பெற்றோரும் கடும் வருத்தத்தில் உள்ளனர்.

23 வயதான அந்த இளைஞர் காணாமல் போவது இது முதன்முறையல்ல எனக் கூறும் அவரது சகோதரி,

ஆனால் நீண்ட நாட்களாக குடியிருப்புக்கு திரும்பாமலும், தொடர்பு கொள்ளாமலும் இருப்பது இதுவே முதன்முறை என தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, இந்தமுறை தமது அடையாள அட்டைகள், வங்கி அட்டை உள்ளிட்ட எதையும் அவர் உடன் எடுத்துச் செல்லவில்லை எனவும், குறித்த தகவலை விசாரணை அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளதாக அந்த சகோதரி தெரிவித்துள்ளார்.

முன்னர் நண்பர்கள் மூலம் அவர் எங்கே சென்றுள்ளார் என்பது தெரியவரும். ஆனால் இந்தமுறை அவரது நண்பர்களிடமும் எதுவும் தெரிவிக்காமல் சென்றுள்ளார்.

மாயமான இளைஞர் தொடர்பில் துரித நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மண்டல பொலிசார் உறுதி அளித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாகவே தமது சகோதரர் காணமால் போயிருக்க வாய்ப்புள்ளது எனக் கூறும் அவர்,

ஆனால் இதே காரணத்தால் தன்னைத் தானே தண்டித்துக் கொள்ளமாட்டார் என்றே தாம் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்