பாகிஸ்தானின் அனைத்து கோர முகத்தையும் அம்பலப்படுத்திய தமிழன்!

Report Print Santhan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் பாகிஸ்தானின் அத்தனை கோர முகங்களையும் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியும், தமிழருமான த எஸ். செந்தில்குமார் அம்பலப்படுத்தியுள்ளார்.

ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சிலின் 45-வது அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 14-ஆம் திகதி துவங்கிய, இந்த கூட்டம் அக்டோபர் 2-ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில், இந்தியாவின் வெளியுறவுத் துறை அதிகாரியும், தமிழருமான செந்தில்குமார் பாகிஸ்தானின் கோரமுகத்தை அம்பலப்படுத்தினார்.

அதில், இம்ரான்கானின் புதிய பாகிஸ்தானில் நீங்கள் வெளியில் சென்றால் வீடு திரும்ப முடியாது என்பது தான் இப்போதைய நிலைமை.

ஏனெனில், பாகிஸ்தானில் ஒவ்வொரு நாளும் ஆட்கடத்தல்கள், மிரட்டல்கள், ரகசிய தடுப்பு முகாம்கள், சித்ரவதைகள், ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இத்தனை கொடூரமான மனித உரிமை மீறல்களையும் பாகிஸ்தான் அரசாங்கம் நேரடியாக செய்து கொண்டிருக்கிறது.

பாகிஸ்தானின் கில்ஜிட், பலுசிஸ்தானில் இத்தகைய மனித உரிமை மீறல்கள் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன. பல மாகாணங்களில் அரசு அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்பட எந்தவித காரணமின்றி கைது செய்யும் அதிகாரம் படைத்தவர்களாக இருக்கின்றனர்.

பாகிஸ்தானில் தடுப்பு காவலில் இருந்த காஷ்மீர் இன மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்து, கிறிஸ்தவ சிறுமிகள் பாகிஸ்தானில் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. பத்திரிகையாளர்கள் மர்வேய்ஸ் சர்மா, அகமது நூரானி, புகாரி உள்ளிட்டோர் பாகிஸ்தானில் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் சமூக செயற்பாட்டாளர் இத்ரிஸ் காணாமல் போய் 9 மாதங்கள் ஓடிவிட்டன. அவரது கதி என்ன என்று தெரியவில்லை.

ஆனால் இந்தியா குறித்து பொறுப்பே இல்லாமல் அவதூறு பிரசாரங்களை பாகிஸ்தான் மேற்கொண்டு ஐநா மனித உரிமைகள் கவுன்சிலையே திசை திருப்ப முயற்சிக்கிறது.

இதனால், பாகிஸ்தான் தன்னுடைய சொந்த நாட்டில் நடத்தப்பட்டு வரும் அநீதிகளை முதலில் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்