சுவிட்சர்லாந்தில் வெடிப்பொருட்களை பயன்படுத்தி 11 ATM இயந்திரங்களை கொள்ளையடித்த கும்பல்

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் வெடிப்பொருட்களை பயன்படுத்தி ATM இயந்திரங்களை வெடிக்கச் செய்து கொள்ளையடித்த கும்பல் ஒன்று பிரான்சில் சிக்கியுள்ளது.

பிரான்சின் Lyonஇல் அந்த கும்பல் சிக்கியுள்ள நிலையில், பிரெஞ்சு அதிகாரிகளுக்கு சுவிஸ் அதிகாரிகளும் உதவி வருகிறார்கள்.

அந்த கும்பல், கடந்த ஆண்டு பிரான்சில் பல வங்கிகளிலுள்ள ATM இயந்திரங்களை வெடிக்கச் செய்து கொள்ளையடித்துள்ளது.

அதேபோல், சுவிட்சர்லாந்திலும் 11 இடங்களில் தனது கைவரிசையைக் காட்டியுள்ளது அந்த கும்பல்.

நான்கு பேர் கொண்ட அந்த கும்பலை, 50 பிரெஞ்சு பொலிசார் ஆபரேஷன் ஒன்றின் மூலம் சுற்றி வளைத்துப் பிடித்தார்கள். அந்த நால்வரும் இப்போது பொலிஸ் காவலில் இருக்கிறார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்