ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு தடை விதிக்க சுவிஸ் மக்கள் ஆதரவா? எதிர்ப்பா? வெளியான கருத்து கணிப்பு முடிவு

Report Print Basu in சுவிற்சர்லாந்து

ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களை சுதந்திரமாக குடியேற அனுமதிக்கும் ஒப்பந்தத்தை நீக்குவதற்கான சுவிஸ் வலதுசாரி கட்சியின் முயற்சிக்கு நாட்டு மக்கள் ஆதரவா? எதிர்ப்பா? என்ற கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

broadcaster SRF ஞாயிற்றுக்கிழமை இது குறித்த கருத்து கணிப்பின் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் மீது சுவிஸ் மக்கள் கட்சி (எஸ்விபி) வாக்கெடுப்பு நடத்தியது. வாக்கெடுப்புகள் மதியம் முடிவடைந்தன, இறுதி முடிவுகள் இன்று பிற்பகுதியில் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்நிலையில், broadcaster SRF வெளியிட்ட கருத்து கணிப்பு முடிவுகளின் பட, சுவிஸ் மக்கள் கட்சி (எஸ்விபி)-யின் தீர்மானம் 63% -37% என்ற வித்தியாசத்திலல் சுவிஸ் வாக்காளர்களால் நிராகரிக்கப்படும் என்று காட்டுகின்றன.

இந்த ஒப்பந்தம் சுவிஸ் குடிமக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் சுதந்திரமாக குடியேற அனுமதிக்கிறது. சுமார் 4,50,000-க்கும் அதிகமான சுவிஸ் குடிமக்கள் ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்