தொலைத்த பொருளை உயிர் இருக்கும்வரை தேடுவேன் என்று கூறும் சுவிஸ் குடிமகள்: அது என்ன தெரியுமா?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிஸ் குடிமகள் ஒருவர், தனது உயிர் இருக்கும்வரை தான் தொலைத்த ஒரு பொருளை தேட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சூரிச்சைச் சேர்ந்த Milena Moser மொட்டை மாடி ஒன்றில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருக்கும்போது அந்த பொருளைத் தவறவிட்டார்.

அந்த பொருள் ஒரு விலையுயர்ந்த நகையோ, மூதாதையர்கள் விட்டுச் சென்ற பாரம்பரிய சொத்தோ அல்ல, அது ஒரு சைக்கிள் அவ்வளவுதான். அதுவும், அது ஒரு 10 ஆண்டுகள் பழமையான துருப்பிடித்த சைக்கிள்.

ஆனால், 2011ஆம் ஆண்டு Milena அந்த சைக்கிளில் தென் அமெரிக்காவை ஓராண்டு காலம் சுற்றி வந்தார். ஆகவே, அது அவருக்கு சென்டிமென்டான ஒரு சைக்கிள்.

தனது சைக்கிளை கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு 1,000 சுவிஸ் ஃப்ராங்குகள் பரிசளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார் Milena.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்