இன்று முதல் சுவிஸில் இதற்கு அனுமதி! முக்கிய கட்டுப்பாடு தளர்வு: அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Report Print Basu in சுவிற்சர்லாந்து

கொரோனா பரவுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று முதல் சுவிட்சர்லாந்தில் 1,000-க்கும் மேற்பட்டவர்கள் கூட அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்து வருகின்ற போதிலும், கடுமையான சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளி விதிகள் பின்பற்றப்படும் வரை, விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று சுவிஸ் அரசு கூறியுள்ளது.

ஜூலை முதல், கொரோனா வழக்குகள் சுவிட்சர்லாந்தில் படிப்படியாக அதிகரித்து வருகின்றன, எனினும் பிரான்ஸ் அல்லது ஸ்பெயினில் அதிகரிப்பது போல் வேகமாக இல்லை.

கொரோனா வழக்கு அதிகரிப்பால் சில சுவிஸ் பிராந்தியங்கள் கடைகளில் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கின.

ஆனால் கால்பந்து மற்றும் ஐஸ் ஹாக்கி போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் போன்ற நிகழ்வுகளுக்கு பெரிய அளிவலான மக்கள் பங்கேற்கலாம் என்ற ஆலோசனையில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

அரங்கங்களில் மூன்றில் இரண்டு மடங்கு மட்டுமே பார்வையாளர்கள் இருக்க வேண்டும் மற்றும் பார்வையாளர்கள் முகக் கவசம் அணிந்து அமர வேண்டும் போன்ற விதிகள் கட்டாயமாகும்.

உள்ளூர் சுகாதார அதிகாரிகள் ஆபத்து மிக அதிகம் என்று நினைத்தால் நிகழ்வுகளை தடை செய்யலாம்.

சுவிட்சர்லாந்தின் கொரோனா பணிக்குழுவின் சில உறுப்பினர்கள் இந்த தளர்வுக்கு எதிராக அறிவுறுத்தியுள்ளனர், ஆனால், பல மாத கட்டுப்பாடுகளுக்குப் பிறகு மக்களுக்கும் பொருளாதாரத்திற்கும் இது தேவை என சுவிஸ் அரசாங்கம் வாதிடுகிறது,

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்