சுவிஸில் குடியிருப்பு ஒன்றில் கேட்ட அலறல் சத்தம்... இரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட நபர்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் குடியிருப்பு ஒன்றில் ரத்த காயங்களுடன் குற்றுயிராக 59 வயது நபர் மீட்கப்பட்ட நிலையில், 50 வயதான பெண்மணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சூரிச் மண்டலத்தில் புதனன்று இரவு சுமார் 8.30 மணியளவில் குடியிருப்பு ஒன்றில் இருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது.

அண்டை வீட்டில் குடிடிருக்கும் தம்பதி ஒன்று உடனடியாக அலறல் கேட்ட அந்த குடியிருப்பு நோக்கி விரைந்துள்ளனர்.

ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தரையில் ரத்த வெள்ளத்தில் ஒருவர் கிடக்கவும், அவருக்கு அருகே பெண்மணி ஒருவர் அமர்ந்திருப்பதையும் பார்த்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் பொலிசாருக்கும் மருத்துவ உதவிக்குழுவினருக்கும் தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த மருத்துவ உதவிக்குழுவினர் மற்றும் பொலிசார், அந்த குடியிருப்புக்குள் நுழைந்து 59 வயதான அந்த நபரை மீட்டு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் 50 வயதான அந்த பெண்மணியை மண்டல பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களாக குறித்த பெண்மணி வேறு பகுதியில் குடியிருந்து வருவதாகவும், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள அந்த நபர் தனியாகவே வாழ்ந்து வந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும், அந்த பெண்மணி ஏன் தாக்குதலில் ஈடுபட்டார், எந்த ஆயுதத்தை பயன்படுத்தினார் உள்ளிட்ட தகவல்கள், விசாரணைக்கு பின்னரே தெரிய வரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி, தாக்குதலுக்கு இலக்கான நபருக்கும் அந்த பெண்மணிக்கும் என்ன உறவு என்பதையும் பொலிசார் தெளிவுபடுத்தவில்லை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்