சுவிட்சர்லாந்தில் பட்டப்பகலில் சுத்தியலால் தாக்கி இளம்பெண் படுகொலை: விசாரணையில் வெளிவந்த பின்னணி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் காதலை ஏற்க மறுத்த காரணத்தால் உடன் பணியாற்றிய இளம்பெண்ணை ஒருவர் சுத்தியலால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை நவம்பர் மாதம் முதல் துவங்க உள்ளது.

சூரிச் மண்டலத்தின் Dübendorf பகுதியில் குடியிருந்து வந்துள்ளார் 29 வயதான கொல்லப்பட்ட அந்த பெண்.

சம்பவத்தன்று, 2019 பெப்ரவரி 13 ஆம் திகதி, அந்த பெண்ணின் குடியிருப்பு அருகே மறைவாக காத்திருந்துள்ளார் தற்போது கொலை வழக்கினை எதிர்கொள்ளும் அந்த 33 வயது நபர்.

காப்பகம் ஒன்றில் பணியாற்றும் அந்த பெண், குடியிருப்புக்கு வெளியே வந்ததும், அவரை வழி மறித்து, மறைத்து வைத்திருந்த சுத்தியலால், அவரது தலையில் கொடூரமாக தாக்கியுள்ளார் இவர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார் அந்த பெண். தொடர்ந்தும் ஆத்திரம் அடங்காமல், அவர் இறக்கும் வரை சுத்தியலால் தாக்கியுள்ளார்.

பின்னர் தலை சேதமடைந்து ரத்தவெள்ளத்தில் கிடக்கும் அந்த பெண்ணின் புகைப்படம் ஒன்றை பதிவு செய்து, அவரின் நெக்லஸிலிருந்து இரட்டை இதயத்தின் வடிவத்தில் ஒரு பதக்கத்தையும் பறித்துள்ளார்.

தொடர்ந்து அங்கிருந்து மாயமான அந்த நபர், தம்மிடம் இருந்த சுத்தியல் உள்ளிட்ட தமக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் அழித்துள்ளார்.

இருவரும் எங்கே சந்தித்துக் கொண்டனர் அல்லது பழக்கம் ஏற்பட்டது எப்போது என்ற கேள்விகளுக்கு தெளிவான பதிலை இதுவரை விசாரணை அதிகாரிகளால் பெற முடியவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் இரண்டு ஆண்டு காலம் சூரிச் நகரில் இருவரும் ஒன்றாக பணியாற்றியதாகவும்,

அப்போது முதல் குறித்த பெண்ணை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்ததாகவும், கொல்லப்பட்ட பெண் இவரது காதலை கடைசி வரை ஏற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனாலையே, அவர் அந்த பெண்ணை கொலை செய்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்